‘ஜலசமாதி அடைந்த தமிழ்ச்சிறுவன்’.. பரிசோதனை செய்த ஆட்சியர்.. தொடரும் மர்மம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மூச்சைக் கட்டி நிறுத்தும் ஆன்மீக வழிகளாக ஜலசமாதி, ஜீவசமாதி ஆகிய சித்த முறைமைகள் பார்க்கப்படுகின்றன. தமிழ் நிலத்தில் தொன்மைக் காலம் தொட்டே, மிகச்சிறிய வயது தொடங்கி ஜலசமாதி, ஜீவசமாதி அடைந்த சித்தர்களின் வரலாறு உண்டு.

‘ஜலசமாதி அடைந்த தமிழ்ச்சிறுவன்’.. பரிசோதனை செய்த ஆட்சியர்.. தொடரும் மர்மம்.. வீடியோ!

வடலூர் ராமலிங்க வள்ளலார்தான் ஜீவசமாதி என்றால் பலருக்கும் நினைவுக்கு வருபவர்.  7 வயதில் குழந்தை மேதைமையாகத் திகழ்ந்த வள்ளலார், பின்னாளில் வயதான பிறகு மேற்கத்திய நாடுகளின் பார்வைக்காக  இதனைச் செய்ய வேண்டும் என நினைத்தார், இதன் விளைவாக அப்போதைய தென்னாற்காடு மாவட்ட கலெக்டர் ஜே.எச்.கார்ஸ்டினின் முன்னிலையில் இதனைச் செய்ததால், அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசிதழில் இந்தச் செய்தி வெளியானது.

இந்த நிலையில் இத்தனை வருடங்கழித்து திருவண்ணாமலை ஆரணியை அடுத்த படவேடு அரசுப்பள்ளி ஆசிரியரான ஹரிகிருஷ்ணனின் மகனான தன நாராயணன் கடந்த மாதம் ஜல சமாதி என்கிற பெயரில் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறுவனுன் உடல் சிறுவனின் பெற்றோர் மற்றும் மூச்சுப்பயிற்சி பிராணயாகம் சுவாமி பழனி ஆகியோர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டதாக தெரியவந்தது.

ஆனால் இந்த சம்பவம் வாட்ஸ் ஆப்பில் பரவியதை அடுத்து, திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்.பி. சி.பி.சக்ரவர்த்தி, வட்டாட்சியர் ஜெயவேலு உள்ளிட்டோர் தலைமையில் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோரோ, சிறுவனின் உடலை முன்பிருந்தவாறே அடக்கம் செய்துள்ளனர்.

MINORBOY, SOUL, BURYING, THIRUVANNAMALAI