பேருந்தில் சோகம்.. மனைவியின் சடலத்துடன் பணமின்றி தவித்த கணவர்.. நெகிழவைத்த போலீஸ் அதிகாரி.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பேருந்தில் உயிரிழந்த மனைவியின் உடலோடு கலங்கி நின்ற கணவருக்கு காவல்துறை அதிகாரி உதவிய சம்பவம் பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

பேருந்தில் சோகம்.. மனைவியின் சடலத்துடன் பணமின்றி தவித்த கணவர்.. நெகிழவைத்த போலீஸ் அதிகாரி.. வீடியோ..!

Also Read | கரண்ட் கம்பியில் சிக்கிய கைக்குட்டை.. விபரீத முயற்சியில் இறங்கிய நபர்.. அடுத்த வினாடியே நடந்த பெரும் சோகம்..!!

திருநெல்வேலி மாவட்டம் கணக்காடு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருக்கு 62 வயது ஆகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத தனது மனைவி செல்வியை அழைத்துக்கொண்டு அண்மையில் சென்னை வந்திருக்கிறார் அருணாச்சலம். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் ஹோட்டலிலும், மரக்கடையிலும் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவி செல்வியை சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவனையில் அனுமதித்திருக்கிறார் அருணாச்சலம்.

Police helps a man who is struggling with his wife's body in bus

ஆனால், செல்வியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் சொந்த ஊரிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என நினைத்து ஊர் திரும்பியிருக்கின்றனர் இருவரும். மருத்துவனையில் இருந்து ஆட்டோ மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த இவர்கள் திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் ஏறியிருக்கின்றனர். பேருந்து சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்த போது நடத்துனர் இவர்களிடம் டிக்கெட் வாங்கிவிட்டீரகளா எனக் கேட்டதாகவும் அப்போது செல்வி மயங்கிய நிலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது பதற்றமடைந்த நடத்துனர் செல்வியை எழுப்ப முயல அவர் சுயநினைவின்றி இருந்ததாக தெரிகிறது. அப்போது அவர் லேசான மயக்கத்தில் இருப்பதாக அருணாச்சலம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறது ஆம்புலன்ஸ். அப்போது மருத்துவ பணியாளர்கள் செல்வியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு காவல்துறைக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த போலீசார் செல்வியின் உடலை ஆம்புலன்சில் சொந்த ஊர் எடுத்துச்செல்லுமாறு அருணாச்சலத்திடம் கூறியிருக்கிறார்கள். அப்போது, தன்னிடத்தில் அவ்வளவு வசதி இல்லை என அருணாச்சலம் கூறியதை கேட்ட செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் அசோகன் உடனடியாக பண உதவி செய்திருக்கிறார்.

Police helps a man who is struggling with his wife's body in bus

அவரது உதவியின் மூலமாக தனியார் ஆம்புலன்சில் செல்வியின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மனைவியின் உடலோடு பணம் இன்றி தவித்து நின்ற கணவருக்கு காவல்துறை அதிகாரி தக்க சமயத்தில் உதவியது அங்கிருந்தோரை நெகிழ செய்திருக்கிறது.

Also Read | "அந்த ஷூவை கொடுங்க".. கறார் காட்டிய ஏர்போர்ட் அதிகாரிகள்.. பட்டுச் சேலையை பிரிச்சதும் பம்மிய பயணி.. பகீர் வீடியோ..!

POLICE, MAN, HELP, STRUGGLE, WIFE, BUS

மற்ற செய்திகள்