'கஸ்டமருக்கு சாப்பாடு தான் எடுத்திட்டு போறேன்...' அப்படியா...? 'எங்க கொஞ்சம் பேக் ஓப்பன் பண்ணி காட்டுங்க...' - திறந்து பார்த்தபோது தெரிய வந்த உண்மை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆன்லைன் மூலம் பீர் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவையான பால் மற்றும் மருந்துக்கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் உணவகங்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதித்துள்ளது.
இந்நிலையில் சென்னை நியூ ஆவடி சாலை கே.ஜி ரோடு சந்திப்பில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக உணவு டெவிலரி ஊழியர் உடையில் வந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவரை எதேச்சையாக விசாரித்துள்ளனர்.
ஆனால், வெங்கடேஷ் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் வாகனத்தில் இருந்த பையில் சோதனை செய்த போது 10 பீர் பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையில் வெங்கடேஷ், ஆன்லைன் மூலமாக தன்னிடம் ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீடு தேடி மதுபானம் விற்று வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் விளாத்திக்குளத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் வண்டியை ஓரம் கட்ட சொன்னப்போது, அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பியதால், சினிமா பாணியில் போலீசார் அவரை விரட்டி பிடித்தனர்.
விசாரணையில் அவர் சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பதும், செல்போனில் புகையிலை ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீடு தேடி கொடுத்து வந்ததும் தெரியவந்ததுள்ளது.
மற்ற செய்திகள்