ரயில்ல முன்பதிவு செய்த சீட்களை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர்கள்.. இடம் விட மறுத்ததால் பயணிகள் அவதி.. போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெங்களூருவில் இருந்து சென்னை வழியாக அசாம் செல்லும் ரயிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் முன்பதிவு செய்யாமல் பயணித்ததோடு ரயில் பயணிகளுக்கு தொந்தரவு அளித்திருக்கின்றனர். இதனால் காவல்துறை அதிகாரிகள் அந்த நபர்களை உடனடியாக ரயிலில் இருந்து வெளியேற்றி இருக்கின்றனர்.

ரயில்ல முன்பதிவு செய்த சீட்களை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர்கள்.. இடம் விட மறுத்ததால் பயணிகள் அவதி.. போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்..!

Also Read | பதவியை புடுங்கிட்டாங்க.. KL ராகுலுக்கு அதிர்ச்சி அளித்த BCCI.. இலங்கை தொடருக்கு புதிய துணைக் கேப்டன்!

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கவுகாத்திக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் நேற்று கவுகாத்திக்கு பயணித்திருக்கின்றனர். பெங்களூருவில் இருந்து சென்னை வழியாக அசாம் மாநிலம் கவுகாத்தி செல்லும் ரயிலில் இந்த மாணவர்கள் ஏறி இருக்கின்றனர்.

Police expelled North Indians whose occupied reserved Train seats

அப்போது தமிழக மாணவர்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த முன்பதிவு பெட்டிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இது தங்களது இருக்கை என்றும் அதனால் அதிலிருந்து இறங்குமாறும் மாணவர்கள் கேட்க, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை 10 மணி அளவில் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு வந்த தண்டையார்பேட்டை மத்திய ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் திலீப், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காதர் மொய்தீன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் அத்துமீறி ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்திருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களை ரயிலில் இருந்து கீழே இறக்கினர்.

Police expelled North Indians whose occupied reserved Train seats

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்களை அவர்களுக்கான இடத்தில் அமர வைத்தனர். இதன் காரணமாக கவுஹாத்தி ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகைய சிக்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க அரசு மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Also Read | இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட்ல இடம்பெறாமல் போன நட்சத்திர வீரர்.. முழு விபரம்..!

POLICE, NORTH INDIANS, RESERVED TRAIN SEATS

மற்ற செய்திகள்