தொண்டையில் சிக்கிய உணவு.. துடிச்சுப்போன காவலர்.. உயிரை காப்பாற்றிய சப் இன்ஸ்பெக்டர்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காவலர் ஒருவர் மதிய உணவு சாப்பிடும்போது, அவரது உணவு குழாய்க்குள் அடைப்பு ஏற்படவே, தக்க நேரத்தில் செயல்பட்டு காவலரின் உயிரை காப்பாற்றியிருக்கிறார் உதவி ஆய்வாளர்.

தொண்டையில் சிக்கிய உணவு.. துடிச்சுப்போன காவலர்.. உயிரை காப்பாற்றிய சப் இன்ஸ்பெக்டர்..

Also Read | அசால்ட்டா கடசி ஓவரில் பினிஷ் செய்த மில்லர் … மேட்ச் முடிஞ்சதும் போட்ட வைரல் Tweet

போராட்டம் 

கடந்த 21 ஆம் தேதி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள மன்ற கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அப்போது மதிய நேரத்தில் காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அபுதாஹிர் என்னும் காவலர் உணவை உட்கொண்டபோது திடீரென அவருக்கு ஏதோ அடைப்பு ஏற்பட்டதுபோல தோன்றியிருக்கிறது.

சற்று நேரத்தில் மூச்சு விடமுடியாமல் தவித்த அபுதாஹிர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கிறார். அப்போது அதே கட்டிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தாமோதரனிடம் ஓடிச் சென்று சைகையில் தனக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் குறித்து விளக்கினார்.

Police choke after eating lunch rescued by Higher official

முதலுதவி

அபுதாஹிரின் நிலைமையை புரிந்துகொண்ட உதவி ஆய்வாளர் தாமோதரன், உடனடியாக அவரை தூக்கி குலுக்கினார். இதனால் அபுதாஹிர் குணமடைந்தார். அதன்பிறகு அங்கிருந்த சக காவலர்கள் அபுதாஹிருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். சற்று நேரம் ஓய்வெடுத்த பின்னர் அபுதாஹிர் மீண்டும் தனது பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம்  மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சியை வெளியிட்ட நகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் தாமோதரன் அவர்களை பாராட்டியுள்ளனர்.

Police choke after eating lunch rescued by Higher official

நம்முடைய வாய்க்கும் இரைப்பைக்கும் இடையே அமைந்துள்ள நீளமான குழாய் போன்ற அமைப்பே, உணவு குழாய் எனப்படுகிறது. நாம் உணவு உட்கொள்ளும்போது அவை இந்த குழாய் வழியாக இரைப்பையை அடைகின்றன. சில சமயங்களில் உணவானது இந்த குழாயின் நடுவே சிக்கிக்கொள்ளும் போது, அசவுகர்யத்தை சந்திக்க நேரிடுகிறது. இது உணவு குழாயில் வலியை ஏற்படுத்தும். அடிக்கடி உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை நாடவேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Also Read | அமெரிக்காவுல மகனோட திருமணம்.. இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டரில் நேரலை.. உறவினர்களை திக்குமுக்காட வைத்த பெற்றோர்..!

Nenjuku Needhi Home
POLICE, LUNCH, HIGHER OFFICIAL

மற்ற செய்திகள்