777 Charlie Trailer

"ஒருவேளை அவரு பிழைச்சிட்டா மாட்டிக்குவோம்"..திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவர்.. பிளான் பண்ணி மனைவி செஞ்ச காரியம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மேட்டூர் அருகே திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவரை மனைவியே கொலை செய்திருப்பது அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

"ஒருவேளை அவரு பிழைச்சிட்டா மாட்டிக்குவோம்"..திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவர்.. பிளான் பண்ணி மனைவி செஞ்ச காரியம்..!

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழக கர்நாடக எல்லையான காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய வயது 37. இவருக்கும் புகழரசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை சக்திவேல் உயிரிழந்ததாக உறவினர்களிடத்தில் கூறியுள்ளார் அவரது மனைவி. இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேலின் சகோதரர் முத்துச்சாமி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

சந்தேகம்

தனது சகோதரர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முத்துச்சாமி புகார் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் சக்திவேலின் உடலை கைப்பற்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்களிடம் சக்திவேலின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சக்திவேலின் மனைவிக்கும் அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக காவல் துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், இதனை சக்திவேல் கண்டித்ததாகவும் தெரியவரவே இருவரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Police Arrested wife and her lover after her husband dies

விசாரணை

காவல்துறை நடத்திய விசாரணையில் தனது கணவருக்கு தூக்க மாத்திரை கலந்த தண்ணீரை கொடுத்ததாகவும், ஒருவேளை அவர் பிழைத்துக்கொண்டால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் பின்னர் உணவில் மருந்தை கலந்து கொடுத்ததாகவும் சக்திவேலின் மனைவி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து முத்துக்குமாரிடம் விசாரணை செய்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

HUSBAND, WIFE, POLICE, கணவர், மனைவி, போலீஸ்

மற்ற செய்திகள்