ஆசையா கட்டுன 'வீட்டுக்கு' லோன் கட்ட முடில... 3 வருஷமா 'பாஸ்வேர்ட்' மாத்தல... 'சிக்கிய' வங்கி ஊழியரின் 'பகீர்' பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மதுரவாயல் அருகே நடந்த ஏடிஎம் கொள்ளையில் குற்றவாளியை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

ஆசையா கட்டுன 'வீட்டுக்கு' லோன் கட்ட முடில... 3 வருஷமா 'பாஸ்வேர்ட்' மாத்தல... 'சிக்கிய' வங்கி ஊழியரின் 'பகீர்' பின்னணி!

சென்னை மதுரவாயல் அருகேயுள்ள தனியார் ஏடிஎம்மில் கிருமிநாசினி தெளிக்க செல்வதாக கூறி இளைஞர் ஒருவர் அங்கிருந்த ரூபாய் 8,61,900 பணத்தை கொள்ளையடித்த சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அதே வங்கியில் அம்பத்தூர் கிளையில் பணியாற்றி வரும் சிவானந்தன்(39) என்பவர் இந்த கொள்ளையை நடத்தியது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வருமானத்தை மீறி வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து கடன்களையும் வாங்கிவிட்டு இஎம்ஐ கட்ட முடியாமல் திணறி இருக்கிறார். அந்த ஏடிஎம்மின் பாஸ்வேர்ட் கடந்த 3 வருடங்களாக மாற்றப்படாமல் இருந்த விவரம் அவருக்கு தெரியவர கிருமிநாசினி தெளிப்பது போல நள்ளிரவில் சென்று ஏடிஎம் இயந்திரத்தின் லாக்கரை திறந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் போலீசார் சிவானந்தனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சொந்த ஊரில் வீடுகட்டி அதற்கு கடன் கட்ட முடியாமல் மனைவிக்கும், இவருக்கும் சண்டை வந்ததால் சிவானந்தன் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கொஞ்சமும் பதட்டப்படாமல் கொள்ளையடித்த பணத்தை வீட்டில் வைத்துவிட்டு  இன்றும் சிவானந்தன் வேலைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்