தனக்குத்தானே 1000 ரூபாய் அபராதம் விதித்துக்கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று தமிழைத் தேடி பயணத்தை துவங்கி இருக்கிறார்.

தனக்குத்தானே 1000 ரூபாய் அபராதம் விதித்துக்கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ்.. பின்னணி என்ன?

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | மாத சம்பளம் ரூ.4 லட்சம்.. ஏகப்பட்ட சலுகைகள்.. ஆனாலும் வேலைக்கு ஆள் கிடைக்கல.. அப்படி என்னப்பா வேலை அது?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக இருக்க வேண்டும், பள்ளிகளில் தமிழ் தான் கட்டாய பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையிலிருந்து மதுரைக்கு "தமிழைத் தேடி" எனும் பயணத்தை துவங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தமிழைத் தேடி பரப்பரை பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கினார்.

PMK Founder Ramadoss says he fined 1000 rs for himself

Images are subject to © copyright to their respective owners.

இந்த பயணம் மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக பயணித்து மதுரையில் வரும் பிப்ரவரி 28-ம் தேதி நிறைவு பெறுகிறது.

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் பொங்குதமிழ் அறக்கட்டளை தலைவரும் பாமக கவுரவ தலைவருமான ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமிழ் அறிஞர்கள் அரு.கோயிலன், தமிழண்ணல் கோ.பெரியண்ணன், புலவர் சுந்தரராசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது ராமதாஸ் எழுதிய 'எங்கே தமிழ்' புத்தகத்தை சீர்காழி சிவ சிதம்பரம் வெளியிட, முதல் பிரதியை புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டார்.

PMK Founder Ramadoss says he fined 1000 rs for himself

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், நீதிமன்றங்கள், கல்லூரிகளில் தமிழை காண முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் எங்காவது தமிழ் இருப்பதாக யாராவது கூறினால் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்,"நீதிமன்றத்திலோ, கல்லூரிகளிலோ தமிழை காணவில்லை. எங்காவது தமிழை பார்த்தேன் என யாராவது கூறினால் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் தருகிறேன். என்னிடத்தில் அவ்வளவு பணம் இல்லை. என் தலையை வைத்தாவது அந்த பணத்தை கொடுப்பேன்" என்றார்.

தமிழில் பிற மொழி கலப்பு இல்லாமல் பேசவேண்டும் என வலியுறுத்தி பேசிய அவர்,"வேறு மொழிகளின் கலப்பு இல்லாமல் பேசிப் பழகுங்கள். நான் பேசும்போது பிறமொழி கலந்து பேசினால் ஒரு தவறுக்கு 1000 ரூபாய் என எனக்கு நானே தண்டம் விதித்துக்கொள்வேன். அப்படி நீங்களும் முயற்சி செய்யுங்கள்" என்றார்.

Also Read | இன்ஸ்டா தோழிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்.. இளைஞர் போட்ட பிளான்.. கையோட கூட்டிட்டு போன போலீஸ்..!

PMK FOUNDER, RAMADOSS, PMK FOUNDER RAMADOSS

மற்ற செய்திகள்