4 சின்னப் பசங்க நடத்துற கட்சிதான் தி.மு.க... ஸ்டாலினை விளாசும் அன்புமணி ராமதாஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தி.மு.க. என்ற மிகப்பெரிய கட்சியை தற்போது 4 சிறுவர்கள் சேர்ந்து நடத்துவதாக, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்தது குறித்து மக்கள் கேள்வி எழுப்பவில்லை என்று தெரிவித்துள்ள அன்புமணி, ஊடகங்கள் தான் இதனைப் பெரிதுப்படுத்துவதாக கூறியுள்ளார். கட்சித் தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்தப் பின்னரே, பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தாலும், பா.ம.க. அதன் கொள்கையில் இருந்து மாறவில்லை என்று அன்புமணி கூறியுள்ளார்.
சேலம் எட்டு வழிச்சாலையில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டணிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ள அன்புமணி, ஊடகங்கள்தான் திரித்துக் கூறுகின்றன என்றார். நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிதான் என்றார் அன்புமணி ராமதாஸ்.
தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி இருந்தபோது இருந்த மரியாதை இப்போது இல்லை என்று அன்புமணி ராமதாஸ் புகார் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் தனிநபர் விமர்சனம் மட்டுமே வைக்கும் மு.க. ஸ்டாலின், தி.மு.க.வை வழிநடத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பண பலம் படைத்த 4 சிறுவர்கள் மட்டுமே தி.மு.க.வை வழிநடத்துவதாக அக்கட்சியில் உள்ளவர்களே குறை கூறுவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அவர் நமக்களித்துள்ள பிரத்யேகப் பேட்டியை இங்கே காணலாம்.