கன்னியாகுமரியில் ராமானுஜர் சிலை.. காணொலி மூலம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் உள்ள சபஹங்கனா அரங்கில் ஸ்ரீ யதுகிரி யதிராஜ முத் சார்பில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மஹோத்சவம் நிகழ்ச்சி நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் ராமானுஜர் சிலை.. காணொலி மூலம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி.

Also Read | "சாரா கூட டேட்டிங்கா?".. முதல் முறையா கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சொன்ன பதில்.. வைரல் பின்னணி!!

மேலும், சிறப்பு ஹோமம் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளுடன் 24 ஆம் தேதி இந்த விழா தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, அன்று காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இதில், யதுகிரி யதிராஜ ஜீயர் சுவாமிகளின் தெய்வீக உறையும் நடைபெற உள்ள நிலையில் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு விருந்தினர்களாக விஜய் வசந்த் எம்.பி, கர்நாடக அமைச்சர் அஸ்வத் நாராயண், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

PM Narendra Modi to inaugurate ramanujar statue in kanyakumari

இந்த நிலையில், விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டுள்ள சுவாமி ராமானுஜரின் சிலையை வரும் 25 ஆம் தேதியன்று பகல் 12 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் தற்போது அங்கே மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள ராமாயண கண்காட்சிக் கூடம் உள்ளிட்ட பகுதிக்கு செல்ல ஆர்வம் காட்டுவதால் அவர்கள் ராமானுஜரையும் வழிபட்டு செல்லும் வகையில் அவரது சிலை அங்கே திறக்கப்பட உள்ளது.

Also Read | "சூப்பர்ல".. சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்காக.. விசா விஷயத்தில் புது விலக்கு!!.. செம ஹேப்பியில் மக்கள்!!

NARENDRAMODI, KANYAKUMARI, PM NARENDRA MODI, RAMANUJAR STATUE

மற்ற செய்திகள்