பிரதமர் ‘மோடி’ ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண்ணுக்கு.. மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘புதிய’ பொறுப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த தமிழ்ப் பெண் மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்துவரும் FoodBank India என்ற அமைப்பை சினேகா மோகன்தாஸ் என்பவர் நிர்வகித்து வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி கடந்த மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்நாளில் இவரையும் சேர்த்து 7 சாதனைப் பெண்களுக்கு மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
I am signing off from this account. I will be tweeting from @narendramodi Honble PM account, Thanks for the motivation ❤️
— Sneha Mohandoss (@snehamohandoss) March 8, 2020
இந்நிலையில் தற்போது சினேகா மோகன்தாஸ் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்துள்ளார். அவர் சென்னை மண்டலத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ட்வீட் செய்த சினேகா மோகன்தாஸ், ‘என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும், மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் மற்றும் நம்மவர் உயர்திரு டாக்டர். கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும்,மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களுக்கு நன்றி 🙏🏻 @maiamofficial #Maiam https://t.co/0mqIHKsy4x
— Sneha Mohandoss (@snehamohandoss) November 2, 2020
மற்ற செய்திகள்