"சென்னை நினைவுகள்.. மறக்க முடியாத பயணம்".. நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரை துவங்கி வைத்த பிரதமர் மோடி சென்னை நினைவுகள் குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | செஸ் ஒலிம்பியாட் போட்டி.. முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.. ஆரம்பமே அட்டகாசமா இருக்கே..!
செஸ் ஒலிம்பியாட் போட்டி
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றவை. இன்று மாமல்லபுரத்தில் துவங்கும் இந்த போட்டி ஆகஸ்டு 10 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் நிகழாத சாதனை இது. அதேபோல இந்திய அணி 6 அணிகளாக களமிறங்குகிறது. இந்த அணிகளில் மொத்தம் 30 வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். பிரம்மாண்ட முறையில் நடைபெறும் இந்த போட்டி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியை துவங்கி வைத்த மோடி
பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு முருகன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சென்னை நினைவுகள்
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மோடி இன்று காலை 11.55 மணிக்கு டெல்லி திரும்பினார். இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற விழா பற்றிய வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. மேலும், அந்த பதிவில்,"சென்னையின் நினைவுகள். மறக்க முடியாத பயணத்துக்கு நன்றி" என மோடி குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Memories from Chennai!
Thank you for an unforgettable visit. pic.twitter.com/RDmFDbiZhN
— Narendra Modi (@narendramodi) July 29, 2022
மற்ற செய்திகள்