முதுமலையில் பிரதர் மோடி.. ஆஸ்கர் தம்பதி பொம்மன் - பெள்ளியுடன் சந்திப்பு.. வைரல் புகைப்படங்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதுமலை சென்றிருக்கும் மோடி அங்கு ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்தித்திருக்கிறார். இதுகுறித்து மோடி எழுதியுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

முதுமலையில் பிரதர் மோடி.. ஆஸ்கர் தம்பதி பொம்மன் - பெள்ளியுடன் சந்திப்பு.. வைரல் புகைப்படங்கள்..!

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் . கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதன்பின்னர் பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி,  ஈரோட்டைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவரைச் சந்தித்துப் பேசினார். மாற்றுத் திறனாளியான மணிகண்டன் என்பவரை சந்தித்து அவருடன் செல்ஃபி  எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் முதுமலை சென்றுள்ள மோடி யானைகள் காப்பகத்தை பார்வையிட்டார். அப்போது யானை பராமரிப்பாளர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியை மோடி சந்தித்தார். சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் திரைப்படத்தில் இந்த தம்பதியின் வாழ்வியல் படமாக்கப்பட்டிருந்தது. முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்ற இந்திய குறும்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றிருக்கிறது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டார்கள்.

இதனையடுத்து யானை பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி குறித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வந்தன. அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கினார். மேலும் இயக்குநர் கார்த்திகி அண்மையில் முதல்வரை சந்தித்து பாராட்டு பெற்றார். அவருக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் கெளரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இருவரையும் சந்தித்த மோடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதேபோல இருவரும் வளர்த்துவரும் பொம்மி மற்றும் ரகு எனும் யானைகளையும் அவர் பார்வையிட்டார். இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

MODI, BOMMAN, BELLIE

மற்ற செய்திகள்