ஆஸ்கர் தம்பதி பொம்மன் - பெள்ளியை சந்திக்க இருக்கும் பிரதமர் மோடி.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் முதுமலைக்கு வர இருப்பதாகவும் அப்போது ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் - பெல்லியை சந்திக்கவுள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் தம்பதி பொம்மன் - பெள்ளியை சந்திக்க இருக்கும் பிரதமர் மோடி.. முழு விபரம்..!

                        Images are subject to © copyright to their respective owners.

ஏப்ரல் 8 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை விமானநிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா, சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே வேளையில் 50 ஆண்டு புலிகள் பாதுகாப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில் பந்திப்பூர், முதுமலை, வயநாடு சரணாலயங்களைப் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது, யானை பராமரிப்பாளர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்திப்பார் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாதவ் மோடியின் தமிழக பயணம் குறித்து பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் முதுமலையை களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் யானைகளை பராமரித்து வரும் பொம்மா மற்றும் பெள்ளி என்ற தம்பதியினரின் வாழ்க்கை முறை, யானையுடனான அவர்களது பிணைப்பு குறித்து அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டும் இன்றி முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்ற இந்திய குறும்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றிருக்கிறது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து யானை பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி குறித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வந்தன. அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கினார். மேலும் இயக்குநர் கார்த்திகி அண்மையில் முதல்வரை சந்தித்து பாராட்டு பெற்றார். அவருக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் கெளரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PM MODI, MUDHUMALAI, OSCAR, BOMMAN, BELLIE

மற்ற செய்திகள்