அரசுப்பள்ளியில் 'முதலிடம்' பெற்ற மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை... 'அதிர்ந்து' போன ஆசிரியர்கள்... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசுப்பள்ளியில் 'முதலிடம்' பெற்ற மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை... 'அதிர்ந்து' போன ஆசிரியர்கள்... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள கொட்டராமடுகு பகுதியை சேர்ந்த பாலாஜி-சுமதி தம்பதிகளின் மகன் அசோக்குமார்(18). இவர் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அசோக்குமார் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். ஆனால் மதிப்பெண்கள் குறைந்ததால் அவர் கவலையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வீட்டுக்கு அருகேயிருந்த மாந்தோப்பில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசோக் குமார் படித்த பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் அவரின் வீட்டிற்கு சென்று மாணவனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மகனின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் மிகுந்த மனவேதனையில் கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது. 

மற்ற செய்திகள்