'தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக உள்ளது. குறிப்பாக சென்னையில் இதுவரை 1,05,004 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபமாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தென் மாவட்டங்களில் தற்போது பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தமிழகத்தில் சுமார் 77.80% பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்