"பொன்னியின் செல்வனில் வரும் இடங்கள் சுற்றுலா தலமாக மாறும்.!" .. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இடங்களை சுற்றுலா தலங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நாவல் கொடுக்கும் மகத்தான அனுபத்தை திரையிலும் மணிரத்னம் அளித்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்திருக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார். சின்ன பழுவேட்டையராக பார்த்திபனும் சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்துள்ளனர். படத்தின் மிகப்பெரிய பலமான ஆர்ட் டைரக்க்ஷனை தோட்டா தரணியும், ரவி வர்மன் ISC ஒளிப்பதிவையும் செய்திருக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் வரும் இடங்கள் சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீவு திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கூட்டாகத் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன்," சென்னை தீவுத் திடலில் இந்த ஆண்டு 45 க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தினை குறைத்துள்ளோம். தமிழகத்தில் சுற்றுலாத்துறையில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்ற திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.
மற்ற செய்திகள்