“தெய்வங்கள் நடமாடிய புனித மண் தமிழ்நாடு.. இந்து மதத்தில் 1000 இறை தூதர்கள்” ─ படவிழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இயக்குநர் பேரரசு, ஸ்ரீ சபரி ஐயப்பன் திரைப்பட விழாவில் பேசியுள்ளார். இந்த பேச்சு இப்போது வைரலாகி வருகிறது.

“தெய்வங்கள் நடமாடிய புனித மண் தமிழ்நாடு.. இந்து மதத்தில் 1000 இறை தூதர்கள்” ─ படவிழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு.!

Also Read | “என் பொண்ணு இனி இல்ல”.. தலை முழுகிய கோலத்தில் ஜேசுரதி பகிர்ந்த பரபரப்பு ஃபோட்டோ..!

இதில் பேசிய இயக்குநர் பேரரசு,  “திருத்தணியில் இருந்து எடுத்து வந்த விபூதி கொடுத்தார்கள். அதற்கு நிகராக எந்த சால்வையும் கிடையாது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் ஏன் இவ்வளவு கூட்டம் என்றால், இது ஆன்மீக பூமி.

இந்த தமிழ்நாடு தெய்வங்கள் நடமாடிய புனித மண். இந்த தமிழ்நாட்டில் தமிழராக பிறந்து வாழ்வதே பெரிய விசயம். ஒவ்வொரு மதத்திலும் ஒரு இறை தூதர்கள் இருப்பார்கள். இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான இறை தூதர்கள். ஔவையார், அகத்தியர், திருமூலர், சித்தர்கள் என எண்ணிலடங்கா இறை தூதர்கள். சமீப காலமாக பக்தி படமில்லை, குடும்ப படங்களே காணோம். அந்த வகையில் ஸ்ரீ சபரி ஐயப்பன் எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த படத்தை பல ஐயப்ப பக்தர்கள் சேர்ந்து தயாரித்துள்ளார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னை கேட்டால், பக்தி படங்கள் அடிக்கடி வரவேண்டும். அவை முருகனை பற்றி பிள்ளையார் பற்றி சிவனை பற்றி சொல்லும் இந்து படமாகவோ, அன்னை வேளாங்கண்ணி போன்ற கிறிஸ்தவ படங்களாகவோ, அல்லாவின் பெருமையை சொல்லக்கூடிய இஸ்லாமிய படங்களாகவோ இருக்கலாம். ஆனால் பக்திப் படங்கள் அவ்வப்போது வரவேண்டும். என்னதான் நாத்திகம் நிறைய பேசினாலும், இங்கே பக்தி படங்கள் குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

அப்போது 20, 30 வருடத்துக்கு முன்பு எல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளில் மட்டுமே கோவிலில் கூட்டம் இருக்கும்.  ஆனால் இப்போதெலாம் பிரதோசம், ஆடிக்கிருத்திகை என எல்லா விசேசங்களுக்கு கோவிலில் கூட்டம் அதிகரிக்கிறது. பக்தி பெருகுகிறது. ஆகவே தமிழ்த் திரையுலகில் பக்தி படங்கள் வரவேண்டும்.” என பேசினார்.

Also Read | Perarasu : “ஒரு ஊர்ல ஒரு நாத்திகன்”.. பேரரசு சொன்ன வைரல் குட்டிக்கதை.!

PERARASU

மற்ற செய்திகள்