VIDEO: இது வரைக்கும் பார்த்த வீடியோக்களில் 'சிறந்த' வீடியோ இதுவா தான் இருக்கும்...! 'நீங்க நல்லா இருக்கணும்...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கிற்கு பல நிமிட போராட்டத்திற்கு பிறகு உயிர் பெற்று தந்த நபரை சமூகவலைதளங்களில் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

VIDEO: இது வரைக்கும் பார்த்த வீடியோக்களில் 'சிறந்த' வீடியோ இதுவா தான் இருக்கும்...! 'நீங்க நல்லா இருக்கணும்...' - வைரல் வீடியோ...!

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த 9ஆம் தேடி குட்டி குரங்கு ஒன்று பல தெரு நாய்களால் விரட்டி கடிக்கப்பட்டு ஓடியுள்ளது. நாய்களிடம் தப்பி ஒரு வழியாக மரக்கிளையில் ஏறிய அந்த குரங்கிற்கு மூச்சு விட சிரமமாகி மயக்க நிலைக்கு சென்று உயிர் போகும் சூழக்கு சென்றுள்ளது.

இதனைக் கண்ட கார் டிரைவர் பிரபு என்பவர் மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கையில் குழந்தையை போல பிடித்து கீழே இறக்கியுள்ளார். குரங்கை பெரம்பலுாரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்த பிரபு, 'டூ - வீலரில்' நண்பர்கள் உதவியுடன் எடுத்து சென்றுள்ளார்.

ஆனால் போகும் வழியிலேயே குரங்கின் தலை துவண்டு விழுந்ததுலல்லது. இதனைக் கண்டா பிரபு உடனடியாக டூ - வீலரை நிறுத்தி, குரங்கை தரையில் கிடத்தி, மனிதர்களுக்கு கொடுக்கும் முதலுதவி முறைகளை குரங்கிற்கு செய்துள்ளார்.

குரங்கின் நெஞ்சு பகுதியை கையால் அழுத்திவிட்ட போதும் குரங்கு எவ்வித அசைவும் ஏற்படாததால், குரங்கு என்றும் பாராமல் அதன் வாயோடு, தன் வாயை வைத்து ஊதியுள்ளார். பிரபு செய்த இந்த செயல்களை அவருடன் இருந்த நபர் விடியோவாக பதிவு செய்துள்ளார். பல நிமிட போராட்டத்திற்கு பிறகு அந்த குரங்கு மூச்சு விட துவங்கிய குரங்கு கண் விழித்து பார்த்தது.

உடனே பிரபு அந்த குரங்கை குழந்தையை கொஞ்சுவதை போல கொஞ்சினார். பின் பெரம்பலுார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற குரங்கிற்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளர்னர்.

பிரபுவின் மனிதாபிமானமிக்க இந்த செயல் தற்போது இணையத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ட்வீட்டரில் இயக்குனர் சுதா அவர்களாலும் பகிரப்பட்ட இந்த வீடியோவை சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றோரும் பாராட்டி பிரபுவிற்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

 

PERAMBALUR, CAR DRIVER, PRABHU, MONKEY, பிரபு, பெரம்பலூர், கார் டிரைவர், குரங்கு

மற்ற செய்திகள்