‘இன்னும் சீரியஸாகவே எடுத்துக்க மாட்டேங்குறாங்க’... ‘வேதனை தெரிவித்த பிரதமர் மோடி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் ஆபத்தை மக்கள் இன்னமும் புரிந்துகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

‘இன்னும் சீரியஸாகவே எடுத்துக்க மாட்டேங்குறாங்க’... ‘வேதனை தெரிவித்த பிரதமர் மோடி’!

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு அறிவுரைகளையும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா எச்சரிக்கை விதிமுறைகளை சரியானபடி பின்பற்றவில்லை என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில்  அவர் கூறி இருப்பதாவது:-

‘கொரோனா வைரஸ் ஆபத்தையும், ஊரடங்கு உத்தரவையும் பெரும்பாலான மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. கொரோனா தாக்கத்தின் தன்மையை மக்கள் உணராமல் இருப்பது கவலையளிக்கிறது. தயவுசெய்து மத்திய அரசு கூறும் வழிமுறைகளை தீவிரமாக பின்பற்றி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதேபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்துமாறு மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று நடந்த மக்கள் சுய ஊரடங்கை கூட பலர் தீவிரமாக கடைப்பிடிக்கவில்லை. பலரும் வெளியே சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் மேலும் பரவக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு மிக கடுமையான விதி முறைகளை அறிவித்துள்ளது. ஆனால் பலரும் அந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் உள்ளனர் என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

NARENDRAMODI, TWITTER, LOCKDOWN, CORONAVIRUS