நாளை முதல் மக்கள்... கூடுதல் 'கவனத்துடன்' செயல்பட வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளை முதல் மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக போரூரில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், ''கொரோனா விவகாரத்தில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது. தமிழகத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 39,590 தெருக்களில் 9 ஆயிரம் தெருவில் பாதிப்பு இருந்த நிலையில் 8 ஆயிரமாக குறைந்துள்ளது. நோய் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்,'' என்றார்.
மற்ற செய்திகள்