ஒமைக்ரான் பரவல்: சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பரவல்: சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை

கொரோனா வைரஸின் ஒரு வகையான ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்குகள், 144 தடை உத்தரவு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் புத்தாண்டு முதல் அமலாகியுள்ளன.

people are restricted to visit chennai marina beach

உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.1.2022 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவர்.

people are restricted to visit chennai marina beach

துணிக்கடைகள், நகைக்கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், அழகு நிலையங்கள், திரை அரங்குகள் என அனைத்திலும் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர். மேலும், மெரினா கடற்கரைக்கு மக்கள் வர முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

people are restricted to visit chennai marina beach

இதுகுறித்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் புத்தாண்டு கொண்டாட்டமாக மக்கள் கடற்கரைகளில் கூட தடை விதிக்கப்பட்டது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மறு உத்தரவு வரும் வரையில் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்லத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில், நடை பாதைகளில் மக்கள் நடைபயிற்சி செய்ய அனுமதி உண்டு.

அதேபோல், கடற்கரையை ஒட்டியுள்ள அணுகுசாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், கடற்கரையின் மணல் பரப்புக்குச் செல்ல மட்டும் தடை விதிப்பதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

சென்னை, CHENNAI MARINA, OMICRON, OMICRON RESTRICTIONS, சென்னை மெரினா, ஒமைக்ரான் பரவல், கொரோனா கட்டுப்பாடுகள்

மற்ற செய்திகள்