பிசிஆர் ‘நெகட்டீவ்’னு வந்தா கொரோனா ‘இல்லை’னு அர்த்தமில்லை.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்றை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் என வந்தாலும் கொரோனா இல்லை என அர்த்தமில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

பிசிஆர் ‘நெகட்டீவ்’னு வந்தா கொரோனா ‘இல்லை’னு அர்த்தமில்லை.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்து கொரோனா அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் மூலம் தொற்றை உறுதி செய்யப்படுகிறது.  பிசிஆர் பரிசோதனை சரியாக செய்தால் மட்டுமே தொற்றை உறுதி செய்ய முடியும். பிசிஆர் பரிசோதனையின்போது 10 விநாடிகள் மூக்கினுள் அந்த குச்சி இருக்கவேண்டும். மாதிரி எடுக்கப்படுவதற்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தினால்தான் சரியாக மாதிரி எடுக்கப்பட்டதாக அர்த்தம் என்றும், சில நேரங்களில் மாதிரிகளை ஆய்வகத்துக்கு சரியாக முறையில் கொண்டு செல்லாவிட்டால் நெகட்டிவ் என காட்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சளி, இருமல் தொந்தரவு இருப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதற்கு முன்பே சிடி ஸ்கேன் செய்துகொள்ளலாம் என்றும், 10 நிமிடங்களில் கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா என தெரிந்துகொள்ளலாம் என்றும் நுரையீரல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.PCR negative does not mean no Corona, Says lungs specialist doctors

பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் சரியாகவே எடுத்தாலும் 70% பேருக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவ் என வரும். அதனால் சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம். மற்ற நுரையீரல் பாதிப்புக்கும், கொரோனா பாதிப்புக்கும் சிடி ஸ்கேனில் வித்தியாசம் தெரியும். இதை வைத்து சிகிச்சையை தொடங்கலாம். இதனால் கொரோனா நெகட்டிவ் என்றால் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என மற்றொரு நுரையீரல் நிபுணரான மருத்துவர் அனந்த சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த வகையான நோயாளிகளுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிரத்யேகமாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.PCR negative does not mean no Corona, Says lungs specialist doctors

மற்ற செய்திகள்