'எங்க வந்து, என்னய கிளம்பி போகச் சொல்ற'... 'தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி அரியமங்கலம் அருகே காவலர் உடையில் இருந்த, காவலரையே அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'எங்க வந்து, என்னய கிளம்பி போகச் சொல்ற'... 'தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்'!

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணி புரிபவர் 40 வயதான ஹரிஹரன். இவர் கடந்த திங்கள்கிழமை மாலை உக்கடை அரியமங்கலம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மீன்வியாபாரியான உக்கடையை சேர்ந்த இஸ்மாயில் என்பவர், குடிபோதையில் மருந்துக் கடையில் போதை மாத்திரை கேட்டு, தகராறு செய்வதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து வந்த தகவலின்பேரில், மருந்து கடைக்குச் சென்ற காவலர் ஹரிஹரன், தகராறில் ஈடுபட்டவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இஸ்மாயில், வீட்டில் இருந்த மீன் வெட்டும் அரிவாளை எடுத்து வந்து தலைமை காவலரின் தலை, முகம் மற்றும் கை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

அருகில் இருந்தவர்கள் தடுப்பதற்காக ஓடிவருவதற்குள், இஸ்மாயில் அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோடியுள்ளார். அதன்பின்னர் படுகாயமடைந்த காவலர் ஹரிஹரன் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தப்பியோடிய இஸ்மாயிலை, போலீசார் தேடி வருகின்றனர். அவர்மீது பல்வேறு வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

ATTACKED, TRICHY