“சென்னைல ஒரு தளபதி இருக்கார்னு எனக்கு இளைய தளபதினு வெச்சாங்க.. ஆனா விஜய்க்கு அந்த பட்டம்” - சரவணன் Breaks

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறுவயதில் இருந்து நடிகராக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்து அதற்கேற்ப நாயகனாகவும் அறிமுகமானவர் நடிகர் சரவணன். 1990 களில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியிருந்த சரவணன், "பொண்டாட்டி ராஜ்ஜியம்", "தாய் மனசு" உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

“சென்னைல ஒரு தளபதி இருக்கார்னு எனக்கு இளைய தளபதினு வெச்சாங்க.. ஆனா விஜய்க்கு அந்த பட்டம்” - சரவணன் Breaks

Also Read | “அம்மா இறந்ததை ருக்குவிடம் சொல்ல முடியாம அழும் குட்டி இப்போது பார்த்தாலும் கண்கலங்க வெச்சிடுவார்” - ‘துள்ளாத மனமும் துள்ளும்’ வந்து 24 வருஷம் ஆச்சா?

இதற்கிடையே சில ஆண்டுகள் எந்த படங்களிலும் தோன்றாமல் இருந்து வந்த சரவணன், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அமீர் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமாக இருந்தார். கார்த்தியின் முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பார்க்கவும் வைத்திருந்தது. இந்த நிலையில் நடிகர் சரவணன் தற்போது Behindwoods நேயர்களுக்கு பிரத்தேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய சினிமா பயணங்கள் குறித்தும், தான் நடித்த கதாபாத்திரங்கள் குறித்தும் பேசி இருந்தார்.

Paruthiveeran Saravanan Exclusive on Ilaiya Thalapathy card

இந்நிலையில் தன் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட இளைய தளபதி எனும் அடைமொழி குறுத்து பேசினார். அதில், “சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் எனும் மினிஸ்டர் இருந்தார். எங்க அப்பாவுக்கு அவரை தெரியும். நான் சேலம் ஆர்ட்ஸ் காலேஜில் எலக்‌ஷனில் நிற்கும்போதும் மினிஸ்டருக்கு என்னை தெரியும். அப்போது, ‘சென்னையில் தளபதி என்று ஒருவர் இருக்கிறார். சரவணன் சேலத்திலேயே தளபதி மாதிரி சுற்றியவன், சினிமாவுக்காக சென்னையில் இருப்பதால் இளைய தளபதி என்று பட்டம் கொடுக்கிறேன்’ என சொல்லி எனக்கு அந்த பட்டத்தை வழங்கினார்.

ஆனால் சில படங்களில் மட்டுமே அந்த அடைமொழியை பயன்படுத்தினேன். கடைசி சில படங்கள் தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கொடுத்ததால், அந்த படங்களில் அந்த அடைமொழி நிலைக்கவில்லை. அதன் பிறகு SAC சார், அந்த பெயரை விஜய்க்கு பயன்படுத்தும்போது நான் வேண்டாம் என சொன்னேன், அப்போது சின்ன வயசு எனக்கு, பொறாமைப் பட்டேன், கோவப்பட்டேன், ஆனால் இப்போது நான் அப்படி இல்லை. இப்போது உறுதிபட அறிவிக்கிறேன்,  என்னை விட அந்த பட்டம் விஜய் சாருக்கு பொருத்தமாகவே இருக்கிறது. ஏனென்றால் அவர் மிக பெரிய உயரத்தை தொட்டிருக்கிறார்.

யாருடைய உணவையும் யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. எனக்காக படைக்கப்பட்ட உணவு எனக்காக இருக்கும். அது எங்கே இருக்கும், எப்படி நம்மிடம் வரும் என்பதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். அது முன்பே தெரிந்துவிட்டால் அந்த மர்மம் போய்விடும்.” என கூறினார்.

Also Read | "சரவணன் நீங்க மாட்டிகிட்டீங்க..".. பரட்டை & சித்தப்பு  கேரக்டர் பத்தி ரஜினி அடித்த கமெண்ட்..

BIGG BOSS SARAVANAN, PARUTHIVEERAN SARAVANAN, PARUTHIVEERAN CHITHAPPU

மற்ற செய்திகள்