நண்பன் மரணமடைந்த சோகம்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பில் பரமக்குடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நண்பர் மரணமடைந்த சோகத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தலைக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் பிரசாந்த். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பரமக்குடி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார் பிரசாந்த். அப்போது ரூம் கதவை உட்புறமாக தாழிட்ட அவர், உள்ளேயே தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து அந்த லாட்ஜுக்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள், மரணமடைந்த பிரசாத்தின் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு உடலை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இதனை தொடர்ந்து அருகில் உள்ள கிராமமதை சேர்ந்தவரான பிரசாந்த் எதற்காக பரமக்குடியில் ரூம் எடுத்து தங்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடைதேட ஆரம்பித்தனர். அப்போது பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. திருச்சியில் பிரசாந்த் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த ஒருவரிடம் நட்பாக பழகியிருக்கிறார். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் திடீரென ஒருநாள் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரசாந்தின் நண்பர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிகிறது.
இந்த விஷயத்தை அறிந்த பிரசாந்த் மனம் பிறழ்ந்த நிலையில் சில நாட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சொந்த ஊரான தலைக்கால் கிராமத்திற்கு செல்வதற்காக நேற்று மதியம் பரமக்குடிக்கு வந்துள்ளார் பிரசாந்த். அவருடைய நண்பரான சென்னையில் வேலை பார்த்து வரும் பூபதி என்பவரிடம் பரமக்குடியில் உள்ள தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி விட்டு பின்னர் தலைக்கால் செல்ல இருப்பதாக பிரசாந்த் கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து லாட்ஜ் எடுத்து தங்கிய அவர், தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நண்பன் உயிரிழந்த சோகத்தில் இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
Also Read | நடுக்கடலில் சொகுசு படகை தாக்கிய மின்னல்.. ஆடிப்போன பயணிகள்.. திக் திக் வீடியோ..!
மற்ற செய்திகள்