'சாகசம் புரியும்'.... 'சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பாராகிளைடிங் தொடங்கப்பட உள்ள சம்பவம் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'சாகசம் புரியும்'.... 'சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்’... விபரங்கள் உள்ளே!

சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாராகிளைடிங் என்பது விருப்பமான ஒன்று. வெளிமாநிலங்களில் பாராகிளைடிங் இருந்து வரும் நிலையில் நமது ஊரில் இல்லாதது சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது இளைஞர்களையும் வருத்தமடையச் செய்து வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் வம்பாகீரப்பாளையம் பகுதியில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மணற்பரப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்துவிட்டு, இளைப்பாருவதற்காக 20 கடைகளுடன் கூடிய அழகிய பொழுதுபோக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு பாரா கிளைடிங் மூலம் பறந்து புதுச்சேரியின் ஒட்டுமொத்த அழகையும் ரசிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மோட்டார் மூலம் இயங்கும் இயந்திரத்தை முதுகில் கட்டியபடி, சுற்றுலா பயணிகள் ராட்சத பலூனை இணைத்து  பறக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும், 15 நிமிடங்கள் வானில் வட்டமிட்டபடி பறப்பதற்கு 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை வரை கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

PARACLIDING, PUDUCHERRY