'சென்னையில கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க...' '2 ஆஸ்பத்திரியில டெஸ்ட் நடக்குது...' - மக்களுக்கு எப்போது செலுத்தப்படும்...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடங்கியது.

'சென்னையில கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க...' '2 ஆஸ்பத்திரியில டெஸ்ட் நடக்குது...' - மக்களுக்கு எப்போது செலுத்தப்படும்...?

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி, இந்தியாவில் உள்ள நகரங்களில் மொத்தம் 17 இடங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையிலும்  கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனை மற்றும் போரூரில் தனியார் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கியது.

சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 150 பேருக்கும், ராமச்சந்திரா மருத்துவமனையில் 150 பேருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. இந்த பரிசோதனை வெற்றியடையும் போது கொரோனா நோயாளிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்