'கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இருக்கா?'... 'இல்லன்னா இந்த மாவட்டத்துக்கு வர முடியாது'... கலெக்டர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது பெரும் தலைவலியாக உருவாகியுள்ளது.

'கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இருக்கா?'... 'இல்லன்னா இந்த மாவட்டத்துக்கு வர முடியாது'... கலெக்டர் அதிரடி!

கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை அமலிலிருந்தது. சமீபத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டு, இ-பதிவு நடைமுறையில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு அதிகம் பேர் வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, 'கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

Other state and Tourists require e-passes to enter Nilgiris district

நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றைச் சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர் மக்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பினாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம். கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இந்த மாநிலத்தை ஒட்டி உள்ள நீலகிரியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்