'இனிமேல் அதிமுகவில் இவர் தான் நம்பர் 3-யா'?... 'அடுத்தடுத்து அரங்கேறிய அதிரடிகள்'... வெளியான முழு விவரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கவும் சட்டமன்ற அ.தி.மு.க. கொறடாவைத் தேர்ந்தெடுப்பதற்கும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் சட்டமன்ற அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்ற அதிமுக பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக அன்பழகன், துணை செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கிடையே சட்டமன்ற அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் அதிமுகவில் 3வது அதிகாரமிக்க நபராக எஸ்.பி.வேலுமணி உருவாகியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே சசிகலாவுடன் உரையாடிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். வி.கே. சின்னசாமி உட்பட 15 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்