‘கோபத்தில்’... ‘எதிர் வீட்டுக்காரர் பார்த்த காரியம்’... 'தவித்துப்போய் நிற்கும் இன்னொரு வீட்டுக்காரர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது வீடு அருகில் பைக்கை நிறுத்தியதால், எதிர் வீட்டுக்காரர் பைக்கை நள்ளிரவில் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில், லாஸ்பேட்டை கொட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது வீட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்த இடம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால், எதிர் வீட்டில் வசித்து வரும் சக்திவேல் என்பவரது வீடு அருகே, இடம் இருந்ததால் அங்கே தனது பைக்கை நிறுத்தியுள்ளார் நாரயணன். இதனால் தனது வீடு அருகே எப்படி, தனது அனுமதியில்லாமல் பைக்கை நிறுத்தலாம் என இருவருக்கும் அடிக்கடி தகராறு நிகழ்ந்த வண்ணம் இருந்துள்ளது.
நாராயணன் திரும்பவும், அதேபோல் இருசக்கர வாகனத்தை சக்திவேல் வீடு அருகே நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. காலையில் எழுந்து பார்த்த நாரயணன், தனது இருசக்கர வாகனம் எரிந்து கடைப்பதைக் கண்டு செய்வதறியாது தவித்துப்போனார். பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பார்த்தபோது, இருசக்கர வாகனத்தை தனது வீடு முன்பு நிறுத்தியதால், ஆத்திரமடைந்த சக்திவேல், யாரும் இல்லாத நேரத்தில், நாரயணனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளது, அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து நாராயணன் அளித்த புகாரின் பேரில், சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.