Annamalai: "அங்க கைகட்டி நின்னு கும்பிட்டாதான் படம் ரிலீஸ்... அந்த நடிகரின் படம் மட்டும்தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போகுது" .. அண்ணாமலை பேச்சு..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. மாற்றத்துக்கான மாநாடு என்ற தலைப்பில் இதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் உள்ளதாக குறிப்பிடு நடப்பு திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த தமது விமர்சன கருத்துக்களை முன்வைத்து பேசியிருந்தார்.
மேலும், இந்தியாவில் 18 சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் இருப்பதாகவும் அதில், 17 பல்கலைக்கழகங்கள் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் தொடங்கப்பட்டவை என்றும் குறிபிட்ட அண்ணாமலை, தமிழுக்காக தஞ்சாவூரில் 1981-ல் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதாகவும், தமிழகத்தில் 5 தமிழ் பல்கலைக்கழகங்கள் தொடங்கினால், அதற்கு மத்திய அரசு நிதி கொடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசியவர், “பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் இன்று ரிலீஸ் பண்ணமுடியவில்லை. அங்க போய் கைகட்டி நின்னு, கும்பிட்டு வந்தால் மட்டுமே, தமிழகத்தில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி... அவருக்கு 1 கோடி ரசிகர்கள் இருந்தாலும் சரி என் பையன் முன்னாள் சமம் இல்லை(முதல்வரை குறிப்பிடுவதாக). அதை ஏற்கிற ஒரு நடிகரின் படம் மட்டுமே இந்த பொங்கலுக்கு வர போகிறது. ரிலீஸ் ஆக போகிறது. அதை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள்.” என்று விமர்சன தொனியில் பேசினார்.
மற்ற செய்திகள்