'வாளி தண்ணீரில் மூழ்கி...' 'ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு...' தெலுங்கானா குழந்தையை அடுத்து மற்றுமொரு சோகம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெலுங்கானாவில் மூன்று வயது குழந்தை நேற்று ஆழ்துளையில் விழுந்து இறந்த செய்தியின் வடு ஆறாத இந்த சூழலில் மற்றுமொரு குழந்தை சிவகங்கையில் வாளி தண்ணீரில் மூழ்கி இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விடுமுறை தினங்களிலும் சரி, சாதாரண தினங்களிலும் சரி சிறு குழந்தைகளை கண்காணிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும். ஆனால் நம்மை நம்பி இந்த உலகத்திற்கு வரும் பிஞ்சு குழந்தைகளை பராமரிப்பதும் பாதுகாப்பதும் பெற்றோர்களின் கடமை, இதை மறுப்பவர்கள் யாரும் இல்லை.
சமீபகாலமாக குழந்தைகள் இறக்கும் செய்தி அதிகரித்துக்கொண்டே வருவது அனைவருக்கும் வருத்தமளிக்கும் விதமாகவே இருக்கிறது.
நேற்று இரவு தெலுங்கானா போச்சன்பள்ளி கிராமத்தில் 3 வயது சிறுவன் விவசாய நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து 12 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.
அந்த சோகமே மாறாத இந்த சூழலில் மீண்டும் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பீசர்பட்டினத்தில் வாளித் தண்ணீரில் விழுந்து குழந்தை உயிரிழந்ததுள்ளது.
ராமசாமி என்பவரின் ஒன்றரை வயது குழந்தை வனிஷ்கா நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி அப்பகுதி மக்களை சோகத்தில் அழ்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்