முதல்வர் கடந்து சென்ற கொஞ்ச நேரத்தில் உடைந்து விழுந்த ராட்சத சிக்னல்.. கள ஆய்வின்போது பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் முக. ஸ்டாலின். அப்போது ஓமலூர் பேருந்து நிலையத்தை அவர் கடந்து சென்ற சிறிது நேரத்தில் அங்கிருந்த டிராஃபிக் சிக்னல் சரிந்து விழுந்திருக்கிறது. இதனால் அப்பகுதியே சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

முதல்வர் கடந்து சென்ற கொஞ்ச நேரத்தில் உடைந்து விழுந்த ராட்சத சிக்னல்.. கள ஆய்வின்போது பரபரப்பு..!

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இதுதான் சார் எங்க இந்தியா".. துருக்கியில் இந்திய பெண் ராணுவ அதிகாரியின் துணிச்சலான செயல்.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி..!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சமீபத்தில் 'கள ஆய்வில் முதல்வர்' எனும் திட்டத்தை துவங்கினார். அதன்படி மாவட்டவாரியாக பயணம் மேற்கொண்டு நடைபெற்று வரும் அரசு திட்டங்களை பார்வையிட்டும் மற்றும் மாவட்ட அதிகாரிகளை சந்தித்தும் வருகிறார். முதல்கட்டமாக வேலூருக்கு கள ஆய்வுக்காக முதல்வர் முக.ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த அரசு பணிகளை பார்வையிட்டதுடன் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கப்படும் பள்ளிகளுக்கு சென்று ஆய்வும் மேற்கொண்டார். அதன் பிறகு சென்னை திரும்பிய முதல்வர் தற்போது இரண்டாம் கட்டமாக சேலம் மாவட்டத்திற்கு ஆய்வுக்காக சென்றிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த முறை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுகளை தொடர்ந்து வருகிறார் முதல்வர். இந்த பயணத்தில் ஓமலூர் - மேட்டூர் பிரதான சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வில் முதல்வர் ஈடுபட்டார். அப்போது, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து, தாலுகா அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் மனு அளிப்பதற்காக காத்திருந்த பொதுமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் ஓமலூர் பேருந்து நிலையம் வழியாக முதல்வரின் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த ராட்சத டிராஃபிக் சிக்னல் கம்பம் திடீரென சரிந்து விழுந்திருக்கிறது. முதல்வர் அந்த வழியாக பயணித்த சிறிது நேரத்தில் டிராஃபிக் கம்பம் விழுந்தது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து வசதிக்காக வைக்கப்பட்டிருந்த 30 அடி உயரமுள்ள இந்த டவர் அடிப்பகுதியில் துருப்பிடித்து, எந்த  நிலையில் இருந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

கேபிள் வயர்கள் கம்பம் மீது சுற்றப்பட்டிருந்ததால் மெதுவாக கம்பம் பேருந்து செல்லும் பாதையில் கீழே விழுந்திருக்கிறது. நல்வாய்ப்பாக இதனால் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முதல்வர் முக.ஸ்டாலின் சென்ற பாதையில் இருந்த டிராஃபிக் சிக்னல், முதல்வர் கடந்து சென்ற சிறிது நேரத்தில் உடைந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக அளவில் ஏற்பட்ட பரபரப்பு..!

SALEM, MKSTALIN, OMALUR TRAFFIC, OMALUR TRAFFIC SIGNAL

மற்ற செய்திகள்