'செகன்ட் ஹேன்ட் பைக் ஒண்ணு இருக்கு...' 'ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரம்...' 'வாட்ஸ்அப் DP-ல ராணுவ வீரர் படம்...' - எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் தான் உண்மை தெரிஞ்சிருக்கு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓஎல்எக்ஸ் மூலம் ராணுவ வீரரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தை விற்பதாக கூறிய வடமாநிலத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் ஷாப்பிங் வழக்கங்கள் சில நேரங்களில் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்தாலும், ஏமாற்றும் நபர்கள் இருக்கும் வரை உறுதி தன்மையுடன் எதையும் வாங்க முடியாத நிலை இருக்கிறது எனலாம். இதுபோல் தான் ஏமாந்துள்ளார் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த நாகராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியர்.
நாகராஜ் பேஸ்புக்கில் இரு சக்கர வாகனம் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டுள்ளார்.
அதில் நம்பரில் பேசிய ஒருவர் தன்னை ஒரு ராணுவ வீரர் என அறிமுகம் செய்துகொண்டு, பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விளம்பரத்தில் சொன்ன இரு சக்கர வாகனத்தை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக ராணுவ வீரரிடம் பேரம் பேசி உள்ளார்.
அதையடுத்து கூரியர் செலவு எனக் கூறி முதலில் 3,150 ரூபாயையும், வாகனம் பார்சலில் வீடு வந்தவுடன் மீதி பணத்தை அனுப்புமாறு ராணுவ வீரர் தெரிவித்ததை நாகராஜ் நம்பி பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார்.
அதையடுத்து தன் பெயரில் இருசக்கர வாகனத்தை மாற்றி தருவதாக கூறி ரூ. 9000-ஐயும் வாங்கியுள்ளார். இவ்வாறாக பல காரணங்களை கூறி சுமார் 32,000 ரூபாய் வரை கூகுள் பே மூலம் நாகராஜ் அனுப்பி உள்ளார். அதையடுத்து மீண்டும் ரூ.10,000 அனுப்புமாறும் கேட்டுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த நாகராஜ், அடையாறு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தத்தில், பாதிக்கப்பட்ட நாகராஜின் பணம் வடநாட்டில் போலி முகவரி உள்ள வங்கிக் கணக்கிற்குச் சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ராணுவ வீரர் என கூறியதால் தான் நம்பி ஏமாந்து விட்டதாக நாகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்