பஸ் ஸ்டாண்ட்டில் தவிச்ச 'மூதாட்டி'.. "போலீஸ் ஸ்டேஷன் கூப்டுட்டு போய் விசாரிச்சப்போ.." காத்திருந்த அதிர்ச்சி.. மனமுடைந்த நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம், குமரபாளையத்தை அடுத்த நாராயணன் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள். இவருக்கு வயது சுமார் 80 இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவரது கணவர் தண்டபாணி, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், தண்டபாணி - லட்சுமி தம்பதியருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர்.
மிகவும் செல்வந்தராக வாழ்ந்து வந்த மூதாட்டி லட்சுமி அம்மாள், தன்னுடைய சொத்துகள் மற்றும் வீடுகள் அனைத்தையும் மூன்று மகன்களுக்கும் பிரித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தனது மூத்த மகன் குணசேகரன் வீட்டில் லட்சுமி அம்மாள் வாழ்ந்து வந்ததையடுத்து, அவரும் இறந்து போகவே, இரண்டாவது மகனான ராஜேந்திரனுடன் லட்சுமி வாழ்ந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், தாயார் லட்சுமி அம்மாள் வங்கி கணக்கில் பல லட்சம் மதிப்பிலான பணம் இருப்பதை அறிந்த குணசேகரன், அதனை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், தாயாரிடம் இருந்த 7 பவுன் நகை உள்ளிட்டவற்றையும் பறித்துக் கொண்ட குணசேகரன், பின்னர் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே தாய் என்றும் பாராமல், லட்சுமி அம்மாளை தனியே தவிக்க விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர், போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிந்து, அங்கிருந்த சிலர் உதவியுடன் பைக்கில் வைத்து மூதாட்டி லட்சுமி அம்மாளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது, தனக்கு மகன்கள் இருந்தும், சொத்தினை பிரித்து கொடுத்த பிறகு தன்னை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் மூதாட்டி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவலர்களே மூதாட்டியை மீட்டு காப்பகம் ஒன்றில் சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் செல்வந்தராக இருந்து வந்த மூதாட்டி, மூன்று மகன்களை பெற்றெடுத்து, இப்படி நிர்கதியாக நிற்கும் சம்பவம், பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்