ஆவி பறக்க கொதித்த நெய்.. வெறும் கையை விட்டு அப்பம் சுட்ட பாட்டி.. சிவராத்திரி விழாவில் ஆச்சரியம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகா சிவராத்திரியை முன்னிட்டு 85 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்தி சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவி பறக்க கொதித்த நெய்.. வெறும் கையை விட்டு அப்பம் சுட்ட பாட்டி.. சிவராத்திரி விழாவில் ஆச்சரியம்..!

"சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க.." அஸ்வின் இப்படி கொந்தளிக்குற அளவுக்கு முன்னாள் வீரர்கள் என்ன செஞ்சாங்க?

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இந்திய முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சிவராத்திரி நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும்  நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இது 100 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தின் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் (85 வயது) மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகளின் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக எரியும் விறகு அடுப்பில் பெரிய பாத்திரத்தை வைத்து நெய்யை ஊற்றி கொதிக்க வைத்தனர்.

Old woman baking bread with bare hands in boiling ghee at Shivratri

பின்னர், வெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் முத்தம்மாள் மற்றும் கோவில் பூசாரிகள் வெறும் கையால் அப்பத்தை எடுத்தனர். இதனைப் பார்த்த, ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியை நள்ளிரவு நேரத்திலும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கண்டு களித்தனர். மகாசிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 48 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக  40 நாள்களாக  விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.

"என்னால முடியல மா, பயமா இருக்கு.." இறப்பதற்கு முன் ரஷ்ய வீரர் அனுப்பிய மெசேஜ்.. உருக வைக்கும் தாயின் நிலை

OLD WOMAN, OLD WOMAN BAKING BREAD, SHIVRATRI, BOILING GHEE, பாட்டி, சிவராத்திரி விழா

மற்ற செய்திகள்