'ஒரே ஒரு செகண்ட்தான்'.. கண் இமைக்கும் நேரத்தில் முதியவர் பார்த்த காரியம்... செய்வதறியாது தவித்துப்போன இன்னொரு முதியவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதியவர் ஒருவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், இன்னொரு முதியவரின் கவனத்தை திசைமாற்றி, அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

'ஒரே ஒரு செகண்ட்தான்'.. கண் இமைக்கும் நேரத்தில் முதியவர் பார்த்த காரியம்... செய்வதறியாது தவித்துப்போன இன்னொரு முதியவர்!

கௌரிப்பட்டியைச் சேர்ந்த முதியவரான கண்ணப்பன் என்பவர், ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக, அருகில் இருந்த சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு சென்றபோதுதான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தேறியுள்ளது.

வங்கியில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அங்குள்ள வாடிக்கையாளர்களின் இருக்கையில் அமர்ந்த கண்ணப்பன், தான் பெற்ற ஓய்வூதியப் பெணத்தை எண்ணத் தொடங்கியுள்ளார். அப்போது அவரின் அருகே அரவம் தெரியாமல் வந்த இன்னொரு முதியவர் நைஸாக அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.

ஆனால் கண்ணப்பன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் கைகளில் இருந்த பணத்தை அந்த முதியவர் அபேஸ் செய்துகொண்டு தப்பியோடியுள்ளார். பதறிய கண்ணப்பன் போலீஸாரில் புகார் அளிக்கவே, சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீஸார், திருடிக்கொண்டு ஓடிய முதியவரான பழனிசாமி என்பவரை பிடித்துள்ளனர். அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

BANK, OLDMAN, STEAL