ஷவர்மா கடையில்.. திடீர் என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்.. "உள்ள என்ன இவ்ளோ வெச்சிருக்காங்க.." தோண்ட தோண்ட கிடைத்த அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீடுகளில் பெற்றோர்கள் தயார் செய்யும் உணவை விரும்பி உண்பது போல, வெளியே சென்று சில ஸ்ட்ரீட் ஃபுட்களை உண்பதிலும் மக்களின் ஆர்வம் அதிகம் உள்ளது.
Also Read | "ஆர்டர் பண்ணது ஸ்விகி'ல.. ஆனா வந்தது என்னவோ Dunzo'ல தான்.." டெலிவரி ஊழியர் போட்ட புது ஐடியா!!
கிரில் சிக்கன், பானி பூரி, சூப், ஷவர்மா என இப்படி பல உணவுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில், கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர், உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
உயிரிழந்த மாணவி
அது மட்டுமில்லாமல், பல இடங்களிலும் உள்ள ஷவர்மா பிரியர்களின் மத்தியிலும், இந்த செய்தி ஒரு விதமான பதற்றத்தை உருவாக்கி இருந்தது. தொடர்ந்து, அந்த மாணவி இறந்ததற்கான காரணம் பற்றி ஆய்வு மேற்கொண்டதில், அவர் அருந்திய ஷவர்மாவில் கெட்டுப் போன உணவின் பாக்டீரியாக்கள் இருந்தது தான் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதிரடி சோதனை
இதனையடுத்து, கேரளாவின் பல பகுதிகளில் ஷவர்மா கடைகளில் கடும் சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். தொடர்ந்து, கெட்டுப் போன சிக்கன்களை பயன்படுத்தும் கடைகளில் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
ஷவர்மா கடைகளில் சோதனை
இந்நிலையில், தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில், சுமார் 40-க்கும் மேற்பட்ட ஷவர்மா மற்றும் பிரியாணி கடைகள் உள்ளிட்டவற்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பல உணவகங்கள் மற்றும் ஷவர்மா கடைகள் செய்த வேலைகள் பற்றி, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
50 கிலோ கெட்டு போன இறைச்சிகள்
அதாவது, மொத்தமாக சுமார் 50 கிலோ வரை கெட்டுப் போன ஆடு மற்றும் கோழி இறைச்சியை அங்குள்ள கடைகளில் இருந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை அழித்ததோடு மட்டுமில்லாமல், கெட்டுப் போன இறைச்சியை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்