ஆன்லைன் கேமுக்கு அடிமையான வடமாநில பெண் தமிழகத்தில் மரணம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலாயுதபுரத்தில் வட மாநில பெண் ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் அடிமையாகி ரூபாய் 70 ஆயிரம் இழந்ததால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

ஆன்லைன் கேமுக்கு அடிமையான வடமாநில பெண் தமிழகத்தில் மரணம்.!

சங்கரன்கோவில், நவ. 28 : கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊர் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகை வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்தவர் அஜய் குமார் மாண்டல். ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தன்னுடன் தன்னுடைய 22 வயது  மனைவி ஸ்ரீ தனா மாஞ்சி என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.

பெருமாள் பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த அஜய் குமார் மாண்டல் தன் மனைவியையும் தன்னுடனே தங்க வைத்திருந்தார்.  இந்த நிலையில்தான், வழக்கம்போல காலை வேலைக்கு சென்ற அஜய் குமார் மாண்டல் வேலை முடிந்ததும், மாலையில் வீடு திரும்பி வந்துள்ளார். வந்தவர் தன் வீட்டை அடைந்ததும் அங்கிருந்த காட்சியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

ஆம், அங்கு தன் மனைவி ஸ்ரீ தனா மாஞ்சி தன்னுயிரை மாய்த்துக்கொண்டு இருந்தது கண்டு அஜய் குமார் மாண்டல் அதிர்ச்சி அடைந்தார்.  பின்னர் இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அருகில் இருந்த கரிவலம்வந்தநல்லூரில் இருந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பின்னர் ஸ்ரீ தனா மாஞ்சியின் உடலை கைப்பற்றிய போலீஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இருந்து, ஸ்ரீ தனா மாஞ்சி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானதும், அந்த விளையாட்டில், அவர் ரூபாய் 70 ஆயிரம் பணத்தை இழந்ததும் தெரியவந்துள்ளது,

மேற்படி, பணத்தை இழந்ததால் மன உளைச்சல் அடைந்த ஸ்ரீ தனா மாஞ்சி, தன் வீட்டில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுத்ததும், அதன்படி உயிரை மாய்த்துகொண்டதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பிழைப்புக்காக வந்த பெண் ஸ்ரீ தனா மாஞ், தன் கணவர் தன் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த நிலையில், இப்படி ஆன்லைன் கேமிற்கு அடிமையானதும், அதில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொண்டதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரை மாய்த்துக்கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல. எதிர்மறை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

ONLINE GAME, WOMAN, HUSBAND AND WIFE

மற்ற செய்திகள்