வடசென்னை அருகே பயங்கரம்!.. சாலையில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ... வெடித்து சிதறிய பொருட்கள்... விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வடசென்னை அனல்மின் நிலைய சாலையில் மதுபாட்டில்கள் கடத்திச் சென்ற ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின் நிலைய சாலையில் ஆட்டோ ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோ டிரைவர், அத்திப்பட்டு பகுதியில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி, சென்னையில் கூடுதல் விலைக்கு விற்க கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஆட்டோவின் பின்பகுதியில் திடீரென தீப்படித்து எரிந்தது. இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் சத்தம் போட்டனர். எனினும், ஆட்டோ வேகமாக சென்றது. அனல் மின்நிலைய காவலர்கள் விசில் சத்தம் எழுப்பி ஆட்டோ தீப்பிடித்து எரிவதாக டிரைவரை எச்சரித்தனர். அதன்பிறகு ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
அந்த ஆட்டோவில் இருந்த மது பாட்டில்கள் வெப்பம் தாளாமல் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருபுறமும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த வடசென்னை அனல்மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் ஆட்டோவில் எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர்.
எனினும் ஆட்டோவும், அதில் இருந்த மதுபாட்டில்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS