வாக்காளர் அட்டை இல்லையா..? ‘கவலையே வேண்டாம்’. இந்த 11 ஆவணத்துல ஒன்னு இருந்தா கூட போதும்.. தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் இந்த 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் அரசு வழங்கிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதில், ஆதார்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, பாஸ்போர்ட், வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, ஊரக வேலைவாய்ப்பு அட்டை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு அட்டை, ஓய்வூதிய அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
மேலும் மத்திய-மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் அட்டை, எம்எல்ஏ மற்றும் எம்பி ஆகியோருக்கு வழங்கப்படும் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வாக்களிப்பதற்கு பூத் சிலிப் கட்டாயம் இல்லை என்றும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்காலம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்