தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை எப்போது குறைக்கப்படும்..? சட்டமன்றத்தில் நடந்த ‘காரசார’ விவாதம்.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை எப்போது குறைக்கப்படும்..? சட்டமன்றத்தில் நடந்த ‘காரசார’ விவாதம்.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!

தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை வரும் 24-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

No plans to cut petrol, diesel prices immediately: TN Finance minister

இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுக தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக மூன்று முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.

No plans to cut petrol, diesel prices immediately: TN Finance minister

கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோல் மீதான செஸ் வரி 9 சதவீதமாக இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக பெட்ரோல் மீதான வரியை 28-ல் இருந்து 30-ஆக அதிகரித்தது. மேலும், பாஜக அரசு 2014-ல் பொறுப்பேற்றதை தொடர்ந்துதான் செஸ் வரி கடுமையாக உயர்த்தப்பட்டது. இது பெட்ரோல் விலை உயர்விற்கான முக்கிய காரணம். இந்த வரி வருவாயில் நாட்டின் அனைத்து மாநிலங்களும் வெறும் 4 சதவீதம் மட்டுமே பகிர்ந்தளிக்கப்படுகிறது. எஞ்சிய 96 சதவீத வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இதேபோல் ஜி.எஸ்.டி வரியில் மாநில அரசுக்கு வர வேண்டிய வருவாயையும் மத்திய அரசே வைத்துக் கொள்கிறது.

No plans to cut petrol, diesel prices immediately: TN Finance minister

தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிதிநிலையின் படி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதத்தை கொரோனா இரண்டாவது அலைக்காக செலவிட்டு வருகிறோம். ஏழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க இரண்டு தவணைகளாக ரூ.2,000 நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அதனால் நிதிநிலை சீரடைந்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பதிலளித்தார்.

மற்ற செய்திகள்