‘இனிமே ஊர் எல்லைக்குள்ள மது குடிச்சீங்கன்னா’.. ‘இதான் தண்டனை!’.. அதிரடியாக அறிவித்த ஊர் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒரத்த நாடு அருகே உள்ளது தென்னமநாடு கிராமம், இந்த கிராமத்தின் எல்லைக்குள் மது அருந்தினாலோ, அல்லது மது அருந்திவிட்டு வந்து சண்டை சச்சரவுகளை செய்தாலோ கடுமையான அபராதமாக ரூ.5000 விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இனிமே ஊர் எல்லைக்குள்ள மது குடிச்சீங்கன்னா’.. ‘இதான் தண்டனை!’.. அதிரடியாக அறிவித்த ஊர் மக்கள்!

கடந்த 2000-ஆம் ஆண்டு இந்த ஊரில், ஊர்மக்களே கூடி மதுவிலக்குக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து மது அருந்திவிட்டு நடக்கும் எந்த சண்டையும் இந்த ஊரில் இல்லாமல் இருந்தது. திருவிழா என்றால் கூட, போலீஸை பாதுகாப்பு அழைக்காமல் தாங்களே முன் நின்று நடத்தியதாகக் குறிப்பிட்ட இந்த கிராமப் பெரியோர், அதன் பிறகு நடந்த வேதனைகளையும் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஊருக்குள் குடிகாரர்களின் அலப்பறைகள் பெருகியதாகவும், அவர்கள் குடித்துவிட்டு பிளாஸ்டிக் கப்புகளை அப்படியோ போட்டுவிட்டு செல்வதாகவும், இதனால் அவர்களுடன் சேர்ந்து இளைஞர்கள் சீரழிவதாகவும், குடிகாரர்கள் குடித்துவிட்டு வயலில் தூக்கிப் போட்ட கண்ணாடி பாட்டில்கள், வயலில் இறங்கி வேலைபார்க்கும் விவசாயிகளின் கால்களை பதம் பார்ப்பதாகவும் கூறியதோடு, இதனால் இந்த அவசர அபராத விதியை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த அபராதத் தொகையை குளம் தூர்வாறுதல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட ஊர் நலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

TASMAC, VILLAGE