Battery Mobile Logo Top
The Legend

"யாரும் காலைல சாப்பிடாம இருக்க கூடாது".. பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அன்புக்கட்டளை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாணவர்கள் காலை உணவுகளை தவறவிடக்கூடாது என மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

"யாரும் காலைல சாப்பிடாம இருக்க கூடாது".. பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அன்புக்கட்டளை..!

Also Read | அரசு பள்ளிகளில் இனி காலை சிற்றுண்டி..அரசாணை வெளியீடு.. அடேங்கப்பா மெனு செம்மையா இருக்கே..!

விழிப்புணர்வு

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு வாகனங்களை இன்று கொடியசைத்து துவக்கிவைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பள்ளி மாணவர்களிடையே உடல்நலம் மற்றும் மனநலன் குறித்த விழிப்புணர்வை இந்த வாகனங்கள் ஏற்படுத்த இருக்கின்றன. இதற்காக 805 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் மருத்துவர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வு பயம், மனரீதியான அழுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு இந்த வாகனங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது. மேலும், பள்ளிகளில் மருத்துவ முகாம் நடைபெறும் போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களும் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No one missed breakfast TN CM Stalin speech among students

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லால் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாப்டாம இருக்க கூடாது

இந்த விழாவில் பேசுகையில் மாணவர்கள் காலை உணவை தவற விடக்கூடாது எனத் தெரிவித்தார். மேலும், இதுபற்றி அவர் பேசுகையில்,"காலையில் சில மாணவிகளை சந்தித்தேன். அப்போது அவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள்? காலையில் சாப்பிட்டீர்களா? எனக்கேட்டேன். அதில் 3 பேர் காலையில் சாப்பிடவில்லை என்றனர். அப்படி இருக்கக்கூடாது. மாணவர்கள் காலை நேரத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். காலையில் அதிகமாகவும் பிற்பகலில் அதைவிட குறைவாகவும்  இரவில் இன்னும் குறைவாகவும் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். பள்ளிக்கு வரும் அவசரத்தில் பல மாணவர்கள் காலை உணவை தவிர்க்கின்றனர். அப்படி இருக்க கூடாது" என அறிவுறுத்தினார்.

No one missed breakfast TN CM Stalin speech among students

மேலும், "மாணவர்கள் நன்றாக சாப்பிட்டால் தான் நன்றாக படிக்க முடியும். இதனை முதல்வராக மட்டும் அல்லாது தாயாக, தந்தையாக உங்களுக்கு கூறுகிறேன்" என்றார். மேலும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் அவர்களுக்கு கல்வி தானாக வந்துவிடும் எனக்கூறிய முதல்வர் கல்விக்கூடங்கள் மதிப்பெண் கூடங்களாக மட்டுமே இருக்கக் கூடாது, மாணவர்களின் மதிப்பை உயர்த்தும் இடங்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | நாட்டின் மிகப்பெரிய திருட்டு.. "நகையை கண்டுபிடிச்சு கொடுக்குறவங்களுக்கு 57 கோடி ரூபாய் தர்றேன்".. தொழிலதிபரின் மகள் வெளியிட்ட பரபர அறிவிப்பு..!

MKSTALIN, DMK, CM MK STALIN, BREAKFAST, TN GOVT, CM STALIN SPEECH, FREE BREAKFEST FOR SCHOOL STUDENT

மற்ற செய்திகள்