தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்..!

சென்னை திரு.வி.க நகர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பொது போக்குவரத்து குறைந்த அளவு மட்டுமே இயக்கப்படுவதாகவும், பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.No lockdown extension in TamilNadu says minister R.B.Udhayakumar

மேலும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு  அமல்படுத்தத்  தேவையோ, சூழலோ தற்போது இல்லை’ என தெரிவித்தார். அதேசமயம் வேளாண் மசோதாக்கள் பற்றி பேசிய அமைச்சர், ‘எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். வெறும் வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போன்று இப்போது வேளாண் மசோதாக்களை வைத்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்’  என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

மற்ற செய்திகள்