'இது கலக்கல் பரிசு!'.. 'புத்தாண்டின் முதல் நாள் முதல்'... வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஜியோவின் ‘மெகா’ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தொடக்கத்தில் வாய்ஸ் அழைப்புகளுக்கென்று கட்டணமே கிடையாது என அறிமுகமான ஜியோ, வாடிக்கையாளர்கள் பெருகிய பின்னர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது.

'இது கலக்கல் பரிசு!'.. 'புத்தாண்டின் முதல் நாள் முதல்'... வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஜியோவின் ‘மெகா’ அறிவிப்பு!

தொடக்கத்தில் டேட்டாவுக்கு மட்டும்தான் பணம், வாய்ஸ் அழைப்புகளுக்கு கிடையாது, அதாவது., ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டதற்கு கூடுதல் கட்டணம் எனக் கூறி வசூலிக்கப்பட்டது. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டு பரிசாக ஒரு நற்செய்தியை அறிவித்திருக்கிறது. இதுவரை  இது இனி இருக்காது, அனைத்து அழைப்புகளுமே இலவசம் என அறிவித்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. இந்த அறிவிப்பானது நாளை ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது.

Interconnect Usage Charge என்பது ஒரு டெலிகாம் நிறுவனத்திலிருந்து மற்றொரு டெலிகாம் நிறுவனத்திற்குச் செல்லும் அழைப்புகளை மேற்கொள்ளும் முதல் டெலிகாம் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைதான். இந்த தொகையைத் தான் நிமிடத்துக்கு 6 பைசா என ஏர்டெல், வோடஃபோன் நெட்வொர்க்குகளுக்கு அழைக்கும் ஜியோ கஸ்டமர் ஒருவருக்கு கட்டணமாக விதித்தது ஜியோ. அதாவது பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு தங்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இந்த முறைக்கு 'Calling Party Pays' என்று பெயர்.

இதனால் இந்த IUC கட்டணத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ஜியோ டிராயிடம் 2 வருடங்களுக்கு முன்பாக கோரிக்கை வைத்தது. ஆனால் மற்ற நிறுவனங்களோ IUC-க்காக பிற நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிமிடத்துக்கு 14 பைசாவிலிருந்து 30 பைசாவாக உயர்த்தவேண்டும் என்று கோரியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிராய், இந்த IUC கட்டணத்தை 14 பைசாவிலிருந்து 6 பைசாவாகக் குறைத்தது. இதுதான் இப்போது நடைமுறையில் இருக்கிறது.

ALSO READ: அரசியலுக்கு வர வலியுறுத்தி.. 'சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்... தீக்குளிப்பில் ஈடுபட்ட ரசிகர்! மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீஸார்!

ஓராண்டுக்கும் மேல் நடைமுறையில் இருக்கும் இந்த முறையையும் நீக்க முடிவு செய்தது ஜியோ. இதனால்  தற்போது, ஜனவரி 1 முதல், மற்ற நெட்வொர்க்குக்கான IUC அழைப்பு கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்து டிராய் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இனி மற்ற நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக அழைக்கலாம் என ஜியோ அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்