'இன்னும் கொஞ்சம் நேரத்துல...' 'நிவர்' புயல் கரையை கடக்க போகுது...! - சரியா எந்த இடத்துல கடக்குது...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் இருந்து 55 கி.மீ. தொலைவில் நகர்ந்து வரும் நிவர் புயல் இன்னும் ஒருமணி நேரத்துக்கு உள்ளாகவே கரையை கடக்கத் தொடங்கும் என வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது புதுச்சேரியிலிருந்து 55 கி.மீ., கடலூரிலிருந்து 60 கி.மீ. மற்றும் சென்னையிலிருந்து 130 கி.மீ. தொலைவிலும் நகர்ந்து வருகின்றது.
முன்னதாக 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது 3 கி.மீ. வேகம் அதிகரித்து 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி அருகே இன்னும் ஒருமணி நேரத்துக்கு உள்ளாக நிவர் புயல் 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாலை 4 மணியளவில் புயல் கரையை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்