‘நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது’... 'என்ன காரணம்’... ‘ஆனாலும்’... ‘வானிலை மையம் எச்சரிக்கை’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இன்றிரவு புதுச்சேரி அருகே இந்தப் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிவர் புயல் நெருங்குவதால், 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இந்தப் புயல் கரையை கடந்து 6 மணிநேரத்திற்கும் மேலாக அதன் பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்போதும் புயலுக்கு ஏற்படும் கண் பகுதி, தற்போது நிவர் புயலுக்கு ஏற்படாது என வாலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது புயலின் மையப்பகுதியில் அடர்த்தியான மேக மூட்டம் இருப்பதால், நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகவில்லை என வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். எனினும், கண் பகுதி உருவாகாவிட்டாலும், வழக்கமான புயல்களை போலவும் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்