கரையை நெருங்கும் 'நிவர்' புயல்... 'சென்னை', 'கடலூர்' உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடுகள் 'தீவிரம்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், தமிழக மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

கரையை நெருங்கும் 'நிவர்' புயல்... 'சென்னை', 'கடலூர்' உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடுகள் 'தீவிரம்'!!!

நிவர் புயல் இன்று இரவு 8 மணிக்கு மேல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

அனைத்தும் தயாராக உள்ள நிலையில், தற்போது 150 கி.மீ விட்டம் கொண்ட நிவர் புயலின் வெளிச்சுற்று பகுதி கடலின் கரையை தொட துவங்கியுள்ளதால், கடலூர் மற்றும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புயல் வருவதை கருத்தில் கொண்டு, ஆபத்து அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்